சென்னை:அம்பத்தூரில் இரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் சாலையோரத்தில் தனியார் இன்டர்நெட் கேபிள் புதைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரவு நேரத்தில் நடைபெறும் இது போன்ற பணிகளால் பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் மட்டுமின்றி மின்சார இணைப்புகளும் சேதம் அடைகின்றன.
நேற்று நள்ளிரவு இதே போல் இன்டர்நெட் கேபிள் புதைக்க ராட்சத இயந்திரங்கள் மூலம் துளைபோடும் பணி நடைபெற்றது. அப்போது அம்பத்தூர் OT பேருந்து நிலையம் எதிரே மெட்ரோ குடிநீரின் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 3 கிலோ மீட்டருக்கு தண்ணீர் ஆறாக பாய்ந்தது.