தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டின் கதவை உடைத்து 19 சவரன் நகை, பணம் கொள்ளை

தாம்பரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் நகை, 40 ஆயிரம் ரூபாய், வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

நகை, பணம் கொள்ளை
நகை, பணம் கொள்ளை

By

Published : Sep 10, 2021, 9:42 AM IST

சென்னை: தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் ஆதித்நாத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி - விஜயலட்சுமி தம்பதி. கந்தசாமி தலைமைச் செயலகத்தில் வேலை செய்து ஓய்வுபெற்றவர். சமீபத்தில் இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்படவே மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்துள்ளனர்.

சோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, இருவரும் ஆலந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்துள்ளனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் (செப். 8) கந்தசாமியின் வீட்டுக் கதவு உடைக்கப்பட்டுள்ளதாக கந்தசாமியின் உறவினர்கள் சேலையூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 19 சவரன் தங்க நகை, 40 ஆயிரம் ரூபாய், வெள்ளிப் பொருள்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பதைக் கண்டறிந்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள், சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி கொள்ளையில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரித்துவருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:திமுக நகரச் செயலாளர் அடாவடி? நியாயம் கேட்டு தீக்குளிக்க முயன்றவர் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details