சென்னை திருவொற்றியூரில் சமீபகாலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார் வந்த வண்ணம் உள்ளது. புகாரின் பேரில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து குற்றவாளிகளை காவல்துறையினர் தேடிவருகின்றனர். ஆனாலும் இந்த வழக்குகளில் எந்த தடயங்களும் கிடைக்காததால் காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
திருவொற்றியூரில் கார் கண்ணாடியை உடைத்து கார் திருட முயற்சி! - car theft
சென்னை: திருவொற்றியூரில் இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து காரை திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திருவொற்றியூர் குளக்கரை தெருவில் வசிக்கும் சுரேஷ் என்பவர் தனது வீட்டின் வெளியில் காரை நிறுத்தியுள்ளார். இதை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் கார் கண்ணாடியை உடைத்து திருட முயற்சிதுள்ளனர். சத்தம் கேட்டு சுரேஷ் வெளியில் வந்தபோது அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பின்னர் இது குறித்து சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் இந்தப் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததே இச்சம்பவத்திற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.