சென்னை: பிரம்ம கமலம் பூ இரவில் மட்டுமே மலர்ந்து, சூரிய உதயத்திற்கு முன் வாடிவிடும் தன்மைகொண்டது. ஆண்டிற்கு ஒருமுறை இரவு 8 மணிக்கு தொடங்கி நன்றாக விரிந்து முழுமையாக காட்சி தரும் மலரானது. விடியற்காலை தொடங்குவதற்குள் சுருங்கி மொட்டு வடிவில் மாறிவிடும்.
மலர்ந்து குலுங்கும் பிரம்ம கமலம் பூ
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அரியவகை மலரான பிரம்ம கமலம் சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள தோட்டங்களில் அழகாகப் பூத்து குலுங்குகிறது.
மலர்ந்து குலுங்கும் பிரம்ம கமலம் பூ
வெள்ளை நிறத்தில், நட்சத்திர வடிவில் பெரிய அளவில் இருக்கும் இந்த அரியவகை பிரம்ம கமலம் மலர் சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள தோட்டங்களில் அழகாகப் பூத்துள்ளன. இந்த அபூர்வ வகை பூவை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
இதையும் படிங்க:அல்லி மலர் அழகி ஆஷிமா