சென்னை: தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் பகுதியில் வசித்து வரும் 3 சிறுவர்கள் தங்களது கைகளில் பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு கானா பாடல்களுக்கு ஏற்ற படி கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.
இதனைப் பார்க்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இது போன்று தொடர்ந்து சிறுவர்கள் தங்களை ரவுடிகளை போல பாவித்துக்கொண்டு கைகளில் பட்டாக்கத்தியுடன் மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் கானா பாடலுக்கு ஏற்றார் போல வீடியோ வெளியிட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.