சென்னை:மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவர், சென்னை குரோம்பேட்டை லஷ்மிபுரம் முத்துமாரி அம்மன் கோவில் தெருவில் தனது தோழி ஒருவருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இவர், சென்னை விமான நிலையத்தில் பணியாளராகவும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது காதலனுடன் தொலைபேசியில் தன்னிடம் பேசுமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், காதலன் அதற்கு பேச மறுத்துள்ளார்.
இதனால், மனமுடைந்த அப்பெண் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய தோழி, இளம்பெண் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.