சென்னை அடையாறில் உள்ள தனியார் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற ‘நாளை நமதே’ என்னும் நூல் வெளியீட்டு விழாவில், தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டார். கிறிஸ்தவ பாதிரியார் ஜான்சன் எழுத்தில் உருவாகியுள்ள இந்நூலை அவரே வெளியிட, அதை தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பெற்றுக்கொண்டார்.
பின்னர் பேசிய பாதிரியார் ஜான்சன், இந்த நூல் என் வாழ்க்கையில் பார்த்த இளைஞர்களின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு சாதி மத அடையாளம் இல்லாமல் ஒரு இளைஞன் தன் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்றும், இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மன வலி மற்றும் தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்றும் என் சுய சிந்தனையால் உருவாக்கியுள்ளேன். எனக்கு எம்ஜிஆரை மிகவும் பிடிக்கும் என்பதால் இந்நூலுக்கு ‘நாளை நமதே’ என பெயர் வைத்தேன் என்றார்.