சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கார் ஷோரூம் முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் இன்று மாலை நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். இரு சக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் இச்சம்பவத்தை நிகழ்த்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இது தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகில் நடைபெற்றுள்ளதால் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு, அந்நபர்கள் யாரென்று விசாரித்துவருகின்றனர்.
இது தொடர்பாக ஷோரூம் ஊழியர்கள் பேசுகையில், “கார் ஷோரூம் முன்பு திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது. அதோடு கட்டடங்களும் அதிர்ந்தன. இதையடுத்து ஷோரூம் ஊழியர்கள் அனைவரும் வெளியே வந்து பார்த்தோம். யார் இதைச் செய்தார்கள்?, ஏன் செய்தார்கள்? என்று ஏதும் தெரியவில்லை. ஷோரூம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட கார்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது” என்று அதிர்ச்சியுடன் கூறினர்.