தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 400 பேருக்கு கறுப்பு பூஞ்சை! - கருப்பு பூஞ்சை

சென்னை: தமிழ்நாட்டில் மொத்தம் 400 பேர் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 400 பேருக்கு கருப்பு பூஞ்சை
தமிழ்நாட்டில் 400 பேருக்கு கருப்பு பூஞ்சை

By

Published : May 28, 2021, 5:31 PM IST

சென்னை, தலைமைச் செயலகத்தில் சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கறுப்பு பூஞ்சை தொற்று குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இது குறித்து மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு கூறியதாவது:

”கறுப்பு பூஞ்சை பாதிப்பு ஒரு சில நோயாளிகளுக்கு தென்படுகிறது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் மியூகோர்மைகோசிஸை கட்டுப்படுத்துவது, தடுப்பு மருந்து உபயோகம் ஆகியவை தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கறுப்பு பூஞ்சை புதிய நோயல்ல...

கறுப்பு பூஞ்சை என்பது ஒரு புதிய நோயல்ல, இந்தப் பூஞ்சை பாதிப்பால் கரோனாவிற்கு முன்பே நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இப்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு பூஞ்சை தொற்று ஏற்படுகிறதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கறுப்பு பூஞ்சை தொற்றால் 400 பேர் பாதிப்பு

இதுவரை தமிழ்நாட்டில் கறுப்பு பூஞ்சை தொற்றால் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவர்களைக் கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் 111 பேருக்கு கறுப்பு பூஞ்சை

மியூகோர்மைகோசிஸ் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 111 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நோயாளிகளுக்கு தேவையான மருந்து இருப்பில் உள்ளது.

கறுப்பு பூஞ்சை தொற்று மற்றொருவருக்குபரவாது

மூக்கில் இருந்து கறுப்பு நிறத்தில் திரவம் அல்லது ரத்தம் வெளியேறினால் கறுப்பு பூஞ்சைத் தொற்று இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அவர்கள், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இத்தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மை கொண்டது கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'கரோனா தொற்று உயிரிழப்புகளை வெளியிடுவதில் ஒளிவு மறைவு இல்லை' - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details