'சிலந்தி', 'சண்ட', 'அருவா', 'மாஸ்க்' உள்ளிட்ட படங்களின் இயக்குநரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஆதிராஜன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டவர்கள், பாஜக மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் குட்டி பத்மினி முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கரு.நாகராஜன், “நீட் தேர்வு தொடர்பான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு இருகிறது. மாணவர்கள் தற்கொலை வருத்தம் அளிக்க கூடியது.
மாணவர்கள் தற்கொலைக்கு பெற்றோரே காரணம். நீட் தேர்வு வந்த பிறகு இட ஒதுக்கீடு அடிப்படையில் பல முறை எழுத வாய்ப்பு உள்ளது.
நீட் தேர்வு பயத்தால் மாணவி இன்று தற்கொலை செய்து கொண்டது வருத்தமளிக்கிறது. தமிழ்நாடு அரசியல் கட்சிகள் இதில் அரசியல் செய்கிறார்கள். அகில இந்திய அளவில் நீட் தேர்வு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு தமிழ்நாடு அரசு தயார் நிலையில் இருப்பதால் தமிழ்நாடு மாணவர்களுக்கு 150க்கும் மேற்பட்ட இடங்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் கிடைக்கும். எனவே இதனை மாணவர்கள் கொண்டாட வேண்டும்.
புதிய கல்வி கொள்கையில் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கிறார்கள் என்ற ஒரு வாசகமும் இல்லை. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட போட்டி தேர்வுகளை மாணவர்கள் சந்தித்து வருகிறார்கள்.
“தமிழ்நாட்டில், நீட் தேர்வுக்கு இடஒதுக்கீடு அளித்தால் பாஜக வரவேற்கும்”- கருநாகராஜன் - பாஜக பொதுச்செயலாளர்
சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு இடஒதுக்கீடு அளித்தால் பாஜக வரவேற்கும் என அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
கரு நாகராஜன்
அதில் ஒரு போட்டி தேர்வு தான் நீட் தேர்வு. நீட் தேர்வுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து தமிழ்நாடு அரசு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றினால் அதற்கு பாஜக வரவேற்பு தெரிவிக்கும்” என்றார்.
இதையும் படிங்க:'பாஜக டெல்லியில் மட்டுமல்ல; தமிழ்நாட்டிலும் ராஜாதான்!'