பாஜகவின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிய கல்விக் கொள்கை பற்றி சரமாரியாக எதிர்மறைக் கருத்துகளை நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். சூர்யாவிடம் நான் கேட்கும் சில கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பாரா?
- முதலில் வரைவுக் கொள்கை 448 பக்கங்களையும் படித்துவிட்டாரா?
- படித்த பிறகு உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டீர்களா? பிறகுதான் இந்தக் கருத்தை தெரிவித்தீர்களா? உங்களுடைய குற்றச்சாட்டுகள் பொய்யானது; மக்களை திசை திருப்புவது என்று குற்றம்சாட்டுகிறேன்.
- பள்ளிக் கல்வியில் 3, 5, 8ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு அது அநீதி என குரல் கொடுக்கும் நடிகர் சூர்யாவிற்கு அது பாஸ், பெயிலுக்கான தேர்வு இல்லை என்பது தெரியுமா?
- கடந்த இரண்டு ஆண்டுகளாக 'நீட்' தேர்வு மூலமாக மிகவும் பின்தங்கிய மாவட்டம், பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி, சமச்சீர் கல்வி மாணவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா சூர்யா?