சென்னை:மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி சொத்து குவிப்பு வழக்கில் இவருக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதனைத் தொடர்ந்து ஜூன் 14 ஆம் தேதி அதிக சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்ததது.
கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, அழைத்துச் செல்லும் வழியிலே திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் செந்தில் பாலாஜியின் பதவிகள், பிற அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக மாற்றப்பட்டு நிலையில், இலாக இல்லாத அமைச்சராக பதிவி வகித்து வந்தார். இந்நிலையில் செந்தில் பாலாஜியின் பதவியை நீக்கும் விதத்தில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதினார்.
அதில் துறைகள் பாதிக்கப்படும் என்பதற்காக சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய செந்தில் பாலாஜியின் துறைகள் பிற அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டது. என்னுடைய கருத்தையும் மீறி அமைச்சரவையில் இருந்து நீக்கப்படாமல் இலாக இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது, சட்ட விதிமுறைகளுக்கு இடையூறு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்ற சூழல் நிழவுவதனால் அமைச்சரவையில் இருந்து அவரை நீக்குவதாக அதிகார பூர்வமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். ஆளுநரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் ஆளுநர் சட்ட மீறலில் ஈடுபடுகிறார் என திமுகவினர் கண்டனங்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, “நேற்று தமிழ்நாடு ஆளுநர் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்து உத்தரவு பிறப்பித்து இருந்தார். தற்போது தற்காலிகமாக அந்த முடிவை நிறுத்தி வைத்துள்ளார். அது குறித்து ஆலோசனைகள் மேற்கொண்டு வருகிறார். தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது இரண்டு ட்விட் செய்திருந்தார், அதில் அப்போதைய தமிழக அமைச்சர் விஜயபாஸ்கரை ஊழல் காரணம் காட்டி உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அப்போதைய ஆளுநருக்கு பரிந்துரை செய்திருந்தார்.