இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க பாஜக பிரதிநிதிகளுக்கு தடை - தமிழிசை - tamilisai-soundararajan
சென்னை: தொலைக்காட்சி விவாதங்களில் சமநிலையும், சமவாய்ப்பும் இல்லாததால் பாஜக சார்பில் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஊடக விவாதங்களில் கலந்து கொள்ள பாஜக பிரதிநிதிகளுக்கு தடை - தமிழிசை
சமீபகாலமாக தொலைக்காட்சி விவாதங்களில் சமநிலையும், சம வாய்ப்பும் பாஜக பிரதிநிதிகளுக்கு வழங்கப்படுவதில்லை. இதனால், பாஜக பிரதிநிதிகள் யாரும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கக்கூடாது. இவ்வாறு தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அதிமுக செய்தி தொடர்பாளர்கள் விவாதங்களில் பங்கு பெற அக்கட்சி தடை விதித்து பின் விலக்கிகொள்ளப்பட்டது.