சென்னை, தாம்பரத்தை அடுத்த அகரம் தென் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 36). இவர் பாஜக, கிழக்கு தாம்பரம் நகரச் செயலராக இருந்து வருகிறார். இவர் நேற்று முன் தினம் (செப்.25) அகரம் தென் ஆலமரம் பேருந்து நிலையத்தின் அருகே பிரதமர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தினார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் தசரதன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும், குறிப்பாக பாஜக மூலமாக எந்த நலத் திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது என்றும் கூறியுள்ளார். அது மட்டுமின்றி ராஜேஸ்வரி, அவரது கணவர் சக்திவேல் இருவரையும் மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், திமுக நிர்வாகி தசரதன் மீதுசேலையூர் காவல் நிலையத்தில்ராஜேஸ்வரிபுகார் அளித்துள்ளார். ஆனால் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், 100க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் ஒன்று திரண்டு தசரதனை கைது செய்யக் கோரிசேலையூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தொண்டர்கள் அதனைத் தொடர்ந்து காவல் நிலையம் அருகே உள்ள தாம்பரம் வேளச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் பாஜக தொண்டர்களைக் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: மோடி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - திருமாவளவன் எம்.பி.