தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்சிக்கு வரும் முன்பே திமுக அராஜகம்- எல். முருகன் - திமுக தொண்டர்கள்

சென்னை: ஆட்சிக்கு வரும் முன்பே திமுக அராஜகத்தில் ஈடுபடுகிறது என மாநில பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

protest
protest

By

Published : May 5, 2021, 3:29 PM IST

மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறை சம்பவத்தைக் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் கரு.நாகராஜன், மாநில துணைத்தலைவர் துரைசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் மேற்குவங்க அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “திமுகவினர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அராஜகத்தில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது சொத்துகளை சேதப்படுத்தியது தவறு. தமிழ்நாடு ஆளுநர் மாற்றப்படுவதாக வரும் செய்தி தவறு; தற்போதைய ஆளுநர் சிறப்பாக செயல்படுகிறார். இன்னும் அவருக்கு பதவிக்காலம் இருக்கிறது.

தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் எல்.முருகன்

ஆளுங்கட்சியாக இருந்தால் ஒரு மாதிரியும், எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு மாதிரியும் திமுக செயல்படுகிறது. அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை எதிர்க்கட்சிகள் வழங்கி செயல்பட வேண்டும் என்பதே எனது நோக்கம். பாஜக 3 இடங்களில் திமுகவை நேரடியாக தோற்கடித்துள்ளது. தாராபுரத்தில் சொற்ப எண்ணிக்கையில் தான் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்துள்ளோம்” என்றார்.

இதையும் படிங்க:அடித்து நொறுக்கப்பட்ட அம்மா உணவகத்தை சீரமைத்த திமுக!

ABOUT THE AUTHOR

...view details