தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்பொருள் அங்காடியில் பாஜகவினர் சூறையாட்டம்! - நீதிமன்ற வழக்கு

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பட்டப்பகலில் பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த பாஜகவினர், பொருட்களை சூறையாடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜகவினர் சூறையாட்டம்
பாஜகவினர் சூறையாட்டம்

By

Published : Oct 8, 2020, 4:28 PM IST

Updated : Oct 8, 2020, 5:18 PM IST

சென்னை: பல்பொருள் அங்காடியில் திடீரென்று நுழைந்து சூறையாடிய 50க்கும் மேற்பட்டவர்களில் 11 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆயிரம் விளக்கு காதர் நவாஸ்கான் சாலையில் ஷாநவாஸ் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இது ரஃபீகா என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில் இயங்கி வருகிறது. இருவருக்கும் இடையில் வாடகை தகராறு ஏற்பட்டு இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கடையை காலி செய்யக் கூறி ரஃபீகா அடிக்கடி கடைக்கு வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. ஒப்பந்தப்படி ஷாநவாஸ் கடையை காலி செய்ய இரண்டு வருடங்கள் கால அவகாசம் இருப்பதாகக் கூறி கடையை காலி செய்ய மறுத்துள்ளார். இவர்களுக்கிடையே பிரச்னை நீடித்து வந்த நிலையில், இன்று (அக்.8) காலை ஊழியர்கள் வந்து கடையை திறந்த கொஞ்ச நேரத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் கடைக்குள் நுழைந்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கி, பொருட்களை சூறையாடத் தொடங்கியுள்ளனர்.

பாஜகவினர் சூறையாட்டம்

ஊழியர்கள் ஆறு பேர் மட்டுமே இருந்த நிலையில், ஏன் இப்படி செய்கிறீர்கள்? என கேட்ட, குதுப் எனும் ஊழியரை தள்ளிவிட்டு, வாடிக்கையாளர்களை வெளியே செல்லுமாறு மிரட்டியுள்ளனர். இந்த திடீர் தாக்குதலால் நெஞ்சுவலி ஏற்பட்ட ஊழியர் குதூப்பை, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மற்ற ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர், காவல்துறையினர் வருவதற்குள் தாக்குதலில் ஈடுபட்ட சிலர் தப்பி சென்றுவிட, கடைக்குள் இருந்த 11 பேரை மட்டும் காவல்துறையினர் பிடித்து ஆயிரம் விளக்கு காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், 11 பேரும் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் சிக்கி விடக்கூடாது என்கிற நோக்கத்தில் கடையை சூறையாடிய கும்பல் சிசிடிவி டிவிஆரை எடுத்து செல்வதற்கு பதிலாக கம்பியூட்டர் சிபியூ-வை திருடி சென்றதால், சிசிடிவி டிவிஆர் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளது.

இதையும் படிங்க: கத்தியை காட்டி மிரட்டி செல்ஃபோன் பறிப்பு - சிசிடிவி காட்சி!

Last Updated : Oct 8, 2020, 5:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details