தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

234 தொகுதியிலும் போட்டியிட முயற்சி - பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி

சென்னை: தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் பாஜகவை போட்டியிடக் கூடிய வகையில் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் ரவி தெரிவித்துள்ளார்.

ரவி
ரவி

By

Published : Oct 16, 2020, 7:55 PM IST

தமிழ்நாடு பாஜவின் உயர்மட்ட கூட்டம், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் முருகன், அக்கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், வி.பி. துரைசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முன்னதாக, பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி ரவி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "பாஜகவில் கல்வியாளர்கள், திரைத்துறையினர் என பலரும் இணைந்து வருகின்றனர். இட ஒதுக்கீடு, தமிழுக்கு எதிரான கட்சி பாஜக என திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கூறி வருகின்றன. அது முற்றிலும் தவறானது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் முதன் முறையாக ராணுவ அமைச்சராக இருந்தார். தற்பொழுது நிதியமைச்சராக உள்ளார். தெலங்கானா ஆளுநராக தமிழ்நாட்டு பெண் உள்ளார். இவையெல்லாம் தமிழ்நாட்டுக்கு எதிரானதா?, 234 தொகுதிகளிலும் எங்களது பார்வை உள்ளது. கட்சியை வாக்குச் சாவடி அளவில் வலிமைப்படுத்தி வருகிறோம்.

அதன் பிறகு கூட்டணி கட்சிகளிடம் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுப்போம். கர்நாடகா, உத்தரப் பிரதேசம் போன்று தமிழ்நாட்டிலும் ஆட்சி அமைக்கும் அளவிற்கு கட்சியை வளர்த்து வருகிறோம். 234 தொகுதியிலும் போட்டியிடக்கூடிய அளவில் வலிமைப்படுத்த முயற்சிகள் செய்துவருகிறோம்" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details