பாஜக தேசிய செயலாளரும், தமிழக மேலிட பொறுப்பாளரான முரளிதரராவ், சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு பாதுகாப்பாகவும், தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டும் உள்ளது. ஜம்மு-காஷ்மீர்க்கு மாநிலத்திற்கு தனி பிரதமர் வேண்டும் என்கிறார் பரூக் அப்துல்லா. தனி பிரதமர் என்பதன் மூலம் தனி நாடு கேட்கும் உமர் அப்துல்லாவின் கருத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலினின் பதில் என்ன? ராகுல் மற்றும் ஸ்டாலின் இந்த விஷயத்தில் ஏன் மவுனமாக இருக்கின்றனர்? ஒரே நாடு.. ஒரே பிரதமர் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு.
காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால்,காஷ்மீரில் தனி பிரதமர், தனி தேசிய கொடி என்பது ஏற்புடையதா என்று மு.க ஸ்டாலின் மற்றும் ராகுல்காந்தியும் கூற வேண்டும். நாட்டில் தேவையற்ற விஷயங்களுக்கு எதிர்கட்சிகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் நாட்டின் முக்கிய பிரச்னைகள் கூட கவனித்தில் எடுத்து கொள்ளாமல் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு பாதுகாப்பாக இருக்காது. ஏனெனில் அவர்களிடம் ஒருமித்த கருத்து என்பது நிச்சயம் இல்லை.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் திமுக ஆட்சி வரும் என ஸ்டாலின் கூறுகிறார். இந்த ஒரு கருத்திற்காக மட்டுமே காங்கிரஸை திமுக ஆதரித்து வருகிறது. காங்கிரஸ் கூட்டணியில் பலரும் பிரதமராக வர வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஸ்டாலின் கருத்திற்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என பலரும் தெரிவிக்கின்றனர்.
முரளிதரராவ் செய்தியாளர்கள் சந்திப்பு தமிழகத்தில் இருக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் திமுக மற்றும் காங்கிரஸ்தான். காங்கிரஸ் ஆட்சியில் என்ன திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் பாஜக ஆட்சியில் நெடுஞ்சாலை துறை முன்னேற்றம், முத்ரா யோஜன திட்டம், ஸ்மார்ட் சிட்டி போன்ற நல்ல திட்டங்கள் கொண்டு வந்துள்ளது பாஜக அரசு. தேர்தல் கருத்துக்கணிப்பில் சந்தேகம் எழுகின்றது. அதேபோல காங்கிரஸ் காட்சி அறிவித்துள்ள 72,000 ரூபாய் வழங்கும் திட்டம் எந்த விதத்திலும் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது, என்றார்.