தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு ஊடகங்களின் ஆலோசகர்களாக பாஜகவினரை நியமிக்க முடிவு! - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

தூர்தர்ஷன் தொலைக்காட்சி, அகில இந்திய வானொலியின் ஆலோசகர்களாக பாஜகவினரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தூர்தர்ஷன் தொலைக்காட்சி
தூர்தர்ஷன் தொலைக்காட்சி

By

Published : Jul 19, 2021, 3:20 PM IST

சென்னை: தூர்தர்ஷன் தொலைக்காட்சி, அகில இந்திய வானொலியின் தமிழ் பிரிவின் ஆலோசகர்களாக பாஜக உறுப்பினர்களை நியமிக்க தகவல் ஒலிபரப்புத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல். முருகன் ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்துறையின் இணை அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில் பல்வேறு புதிய மாற்றங்களைச் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

குறிப்பாக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட பாஜகவினர் பெரும்பாலனவர்கள் தோல்வியைத் தழுவினர். இதில், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது மூத்த தலைவரகளுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், புதிதாக நியமனம் பொறுப்புகள் உருவாக்கி அதில், பாஜக உறுப்பினர்களை நியமிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:மருத்துவப் படிப்பில் 69% இட ஒதுக்கீடு நடைமுறை: அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details