சென்னை:திமுக மாநிலப் பேச்சாளர் சைதை சாதிக், சமீபத்தில் பாஜக-வில் இருக்கும் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட நடிகைகள் குறித்து தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததைக்கண்டித்து, பாஜக மகளிர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மேலும் சைதை சாதிக் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்யவில்லை என பாஜக மகளிர் அணியைச்சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறையிடம் அனுமதி பெறாததால், அண்ணாமலை உட்பட ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.