தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணம் குறித்து ஆலோசனை நடத்த பாஜக ஏற்கனவே முடிவு செய்திருந்தது.
தமிழ்நாட்டில் மட்டும் ஏன் தோல்வி? பாஜக தீவிர ஆலோசனை - தமிழிசை சௌந்தரராஜன்
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைமையகமான கமலாலயத்தில் மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் தலைமையில் நடைபெற்ற அக்கட்சியின் மாநில மையக்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டில் அடைந்த தோல்விக்கான காரணம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
BJP Meeting
இந்நிலையில், சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் கட்சியின் மாநில மையக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டம் தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ் தலைமையில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் மாநில தலைவர் தமிழிசை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, வானதி சீனிவாசன் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.