இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சியில் பெரியார் சிலை மீது செருப்பு மாலையிட்டு அவமதித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அநாகரீக செயலை யார் செய்தாலும் அவர்களை காவல்துறையினர் கைது செய்து சட்டப்படி தண்டிக்க வேண்டும்.
காவி புனிதமானது. அனைவரையும் அரவணைக்கும் தியாகப் பண்பின் குணமே காவி. அதை தவறான சிந்தனையோடு பயன்படுத்துவது பண்பல்ல. ஆனால், அதே நேரத்தில் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி பெரியாரின் பிறந்தநாளன்று நான் கூறியதை மேற்கொள்காட்டி 'இதுதான் அவருக்கு நீங்கள் காட்டும் மரியாதையா' எனக் கேட்டிருப்பது அரசியல் உள்நோக்கோடு வீசியிருக்கிற கேள்வி.