அண்மையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,"நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தையான ஜெயிலர் ஜெயபிரகாஷ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம், தற்போது பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கக்கூடிய ஜவாஹிருல்லா தான்" என்றார்.
அவரின் இந்தக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, மனித நேயமக்கள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் அப்ரார், " நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை ஜெயிலர், மாரடைப்பு காரணமாகப் பல வருடங்களுக்கு முன்பு இறந்தார்.