தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டியலின மக்களை இழிவுப்படுத்தி பேசியதாக திண்டுக்கல் ஐ லியோனி மீது பாஜக புகார் - chennai

பட்டியலின மக்களை இழிவுப்படுத்தி பேசியதாக திண்டுக்கல் ஐ லியோனி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி பாரதிய ஜனதா கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பட்டியலின மக்களை இழிவு படுத்தி பேசியதாக திண்டுக்கல் ஐ லியோனி மீது பாஜக புகார்
பட்டியலின மக்களை இழிவு படுத்தி பேசியதாக திண்டுக்கல் ஐ லியோனி மீது பாஜக புகார்

By

Published : May 21, 2022, 5:17 PM IST

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் பட்டியலின அணியின் மாநில பொதுச் செயலாளர் நாகராஜ் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திண்டுக்கல் லியோனி மீது புகார் ஒன்றை கொடுத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 19ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றதை சமூக வலைத்தளங்களில் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

இதில் தலைமைக் கழக கொள்கை பரப்புச் செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி கலந்து கொண்டு பட்டியலின சமுதாய மக்களை இழிவுபடுத்தும் வகையில் மிகவும் கொச்சையாக பேசியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பட்டியலின மக்கள் குறித்து எம்.பி தயாநிதி மாறன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி ஆகியோர் அவதூறு பரப்பும் வகையில் பேசி வருவதாக தெரிவித்துள்ளார்.

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய திண்டுக்கல் லியோனி, தமிழ்நாடு முதல்வரின் சமுதாயத்தை பற்றி அவதூறாக பேச முடியுமா என கேள்வி எழுப்பினார். எனவே உடனடியாக திண்டுக்கல் ஐ லியோனி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளதாகவும், இதே போன்று அவதூறாக பேசி வந்தால் பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க:குற்றவாளி குற்றவாளி தான்.. குற்றவாளி கடவுளாக முடியாது - கே.எஸ்.அழகிரி

ABOUT THE AUTHOR

...view details