தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசிய உணர்வுக்கு எதிரானது திமுக - ஜே.பி.நட்டா விமர்சனம் - திமுக மீது கடும் விமர்சனம்

சென்னை: தேசிய உணர்வுகளுக்கு எதிராகவும் தேசத்தின் வளர்ச்சியில் அக்கறையற்றவர்களின் புகலிடமாகவும் திமுக இருக்கிறது என பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா விமர்சித்துள்ளார்.

jp natta
jp natta

By

Published : Aug 24, 2020, 11:40 PM IST

தமிழ்நாடு பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்ட பின்பு, அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தனது கருத்தை பதிவு செய்தார்.

அப்போது, காணொலி மூலம் பேசியதாவது, "தமிழ்நாடு தேச விடுதலைக்குப் பாடுபட்ட எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் மண் இது. தமிழர்களின் உயரிய பண்பாட்டுக்கு என் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளிலும், சட்டப்பேரவையிலும் பாஜக கணிசமான இடங்களைக் கைப்பற்றும். நாம் நமது வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும். கரோனா கால லாக்டவுன் என்பது அரசியல் கட்சிகளுக்கும் கூட லாக்டவுன் என்பதாகிவிட்டது.

புதிய கல்விக் கொள்கை

1968, 1986ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கை என்பது வெறும் எண்களை மட்டுமே மாற்றியதாக இருந்தது. கொள்கை ரீதியாக எந்தவித மாற்றமும் கொண்டு வரவில்லை. தற்போதைய புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழி வழிக் கல்வியை உறுதி செய்திருக்கிறோம்.

திமுக மீது விமர்சனம்

தேசிய உணர்வுகளுக்கு எதிரான கட்சியாக இருக்கிறது திமுக. நாட்டின் வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர்களுக்கு புகலிடமாக உள்ளது. இத்தகைய சக்திகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்" என்றார்.

மேலும், "தமிழ் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டிற்கும் ஒரே எதிரி உங்கள் கட்சி பாஜக தான்" என்று ஜே.பி.நட்டாவின் கருத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அன்று முதல் இன்று வரை: காங்கிரஸ் தலைமைத்துவத்தின் சிக்கல் வரலாறு

ABOUT THE AUTHOR

...view details