சென்னை ஆவடியை அடுத்த அண்ணனூர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சகாயராஜ். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றிவருகிறார்.
பைக் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் பலி! - லாரி
சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் உடல் நசுங்கி பலியானார்.
இந்நிலையில் சகாயராஜ் தனது இருசக்கர வாகனத்தில் கொரட்டூரில் இருந்து அம்பத்தூருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அம்பத்தூர் தொழிற்பேட்டை மேம்பாலம் சந்திப்பு அருகில் வந்துகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்துக்கு பின்னால் வந்த லாரி மோதியது. இதில் சகாயராஜ் லாரியின் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே பலியானர்.
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த பூந்தமல்லி போக்குவரத்துப் புலனாய்வு காவல்துறையினர் சகாயராஜின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் லாரி ஓட்டுநரை கைது விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.