தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

biparjoy cyclone: குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களை நாசப்படுத்திய பைபர்ஜாய் - biparjoy cyclone

குஜராஜ் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிள் பைபர்ஜாய் புயல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. புயலின் போது 5120 மின்கம்பங்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் 4600 கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் 3 நெடுஞ்சாலைகளில் உள்ள மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பிபர்ஜாய் புயல்
biparjoy cyclone

By

Published : Jun 17, 2023, 1:46 PM IST

குஜராத்: சவுராஷ்டா மற்றும் கட்ச் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பைபர்ஜாய் புயல் கரையைக் கடந்தது. புயலின் தாக்கம் வலுவாக இருந்ததால் காற்று வேகமாக வீசியது. அப்போது 5120 மின்கம்பங்கள் சாய்ந்தன. ஆனாலும் புயலின்போது எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

பைபர்ஜாய் புயலின்போது 5120 மின்கம்பங்கள் துண்டிக்கப்பட்டதால் , கடலோரப் பகுதிகளில் உள்ள 4600 கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 3500க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் இணைப்பு சீரமைக்கப்பட்டது. மேலும் 3 நெடுஞ்சாலைகளில் உள்ள மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் பைபர்ஜாய் புயலை முன்னிட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் புயல் பாதித்த இடங்களில் உள்ளவர்களை அங்கு இருந்து அப்புறப்படுத்தினர். இதனால், 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்தனர்.

பைபர்ஜாய் புயலால் 20 கட்சா வீடுகள், 20 குடிசை வீடுகள், 2 செங்கல் வீடுகள் சேதமடைந்துள்ளன. புயல் கரையைக் கடந்த போது கட்ச் பகுதிகளில் கனத்த மழை பெய்தது. இந்த மழை அதிகாலை 2.30 மணி வரை நீடித்தது. தொடர்ந்து தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், மாண்ட்வியின் பாரஜ்பாக் பகுதியில் உள்ள ஒரு முதியவரும் குழந்தையும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனாலும் புயலால் எந்த உயிரும் பாதிப்படையவில்லை.

இதையும் படிங்க:பாஜக மாநிலச்செயலாளர் அர்த்த ராத்திரியில் கைது; அண்ணாமலை கண்டனம்!

பிபர்ஜாய் நிலச்சரிவுக்குப் பிறகு, ராஜ் கோட்டில் பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரண்டரை அங்குல மழைப் பதிவாகியுள்ளது. ராஜ்கோட்டில் மணிக்கு 60 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதன் காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ராஜ்கோட்டில் தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் ராஜ்கோட் ரேஸ்கோர்ஸ் ரிங் ரோட்டில் மரம் விழுந்தது. பின்னர் சாலையிலிருந்து அகற்றப்பட்ட பின்பு போக்குவரத்து சீரானது.

இந்த இழப்புகளை குறித்து மாநில நிவாரண ஆணையர் அலோக் குமார் விளக்கம் அளித்துள்ளார். பாண்டே நிலச்சரிவுக்குப் பிறகு பல்வேறு மாவட்டங்களின் நிலைமை குறித்து விரிவான தகவல்களை அளித்தார். இதில் அவர் கூறியதாவது, பாஸ்கிம் குஜராத் விஜ் கம்பெனி லிமிடெட் துறைக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்களில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பெரன்சிங் நடத்தப்பட்டது. இதில் அந்த மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த முதற்கட்ட அறிக்கை தயாரிக்க அறிவுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, புயல் காரணமாக தெற்கு ராஜஸ்தானின் சில பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. இதனால் 5120 மின் கம்பங்கள் விழுந்துள்ளன. அதில் இதுவரை 1320 மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும் புயலால் பாதிக்கப்பட்ட 263 சாலைகளில் 260 சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இது தவிர, இதுவரை 4629 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, அதில் 3580 கிராமங்களில் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:உடற்கல்வி வகுப்பை மற்ற ஆசிரியர்கள் கடன் வாங்காதீர்கள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details