சென்னை:இருள் கவிந்த அதிகாலை 3.30 மணியளவில் சென்னை செல்லும் ரயிலை எதிர்நோக்கி, போபால் ரயில் நிலையத்தில் பதற்றத்துடனும், படபடப்புடனும் ஷாலினி ஷர்மா (23) நின்றுகொண்டிருந்தாள். உடன் பாதுகாப்பிற்காக ஒரு தமிழ் நண்பர் இருந்தார். கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் வந்தவுடன் ஏறிக்கொண்ட, ஷாலினி ஷர்மா முகத்திலொரு விடுதலை உணர்வு. அடுத்து என்ன என்ற பெரிய திட்டமிடல் இன்றி, வீட்டை விட்டு வெளியேறி முன்பின் பார்த்திராத சென்னைக்கு தனது பயணத்தை தொடர்ந்தார்.
ரயிலேறும் முன்னர், தனது செல்போனை மதுரா செல்லும் ரயிலில் தூக்கி எறிந்தார் ஷாலினி. “நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன். யாரும் என்னைத் தேட வேண்டம்” என வீடியோ மெஸ்சேஜை அனுப்பிவிட்டு அதன் பிறகே செல்போனை வீசி எறிந்துள்ளார். ஆனால், அவரது செல்போன் அடுத்த 6 மணி நேரத்திற்குள்ளாக அரசியல் செல்வாக்குள்ள பெற்றோரின் முயற்சியால் கைப்பற்றப்படுகிறது. தீவிர தேடுதல் வேட்டையும் தொடங்கியது.
உயிரைப் பிடித்துக் கொண்டு ஏன் வரவேண்டும்? :
“எனது சிற்றன்னை, சுதா ஷர்மா, என்னை நரபலி கொடுக்க திட்டமிட்டர். தற்செயலாக எனக்குத் தெரியவந்தது. மாற்றாந்தாயின் செல்போன் ஸ்டோரேஞ் அதிகமானதால், அழித்துவிட்டு தருமாறு என்னிடம் கொடுத்தார். அதில் ஒரு ஆடியோவைக் கேட்டு நான் பயத்தில் உறைந்தே போனேன். மகா சிவராத்திரிக்கு நாள் குறித்திருந்தனர். அதன் பிறகே தப்பிக்கும் வழியை தேடினேன்” என்று விளக்குகிறார். முதலில் எனது பிறந்தநாள், பின்னர் ஹோலி பண்டிகை, அதன் பின்னர் மகா சிவராத்திரி என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
“எனது தம்பி, யஷ், நரபலி கொடுக்கப்பட்டுள்ளான் என்றே நம்புகிறேன். மேலும் ஒருவரையும் எனது மாற்றாந்தாய் நரபலி கொடுத்துள்ளார். தம்பி காணாமல் போனதாக கூறிய பெற்றோர், தேடவும் இல்லை இதுவரையிலும் காவல் துறையில் ஒரு புகாரும் கொடுக்கவில்லை. எனது தாயின் மாந்த்ரீக செயல்பாடுகள் தெரிந்தும், தந்தையார் எதுவும் கண்டுகொள்வதில்லை,” என்கிறார். இவரது தாய் ஒரு மாற்றந்தாய் என்பது கோவிட் காலத்தில்தான் தெரியவந்தது. உத்தரப் பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட எங்கள் குடும்பம், தந்தையார், பிரேம்சந்த் ஷர்மாவுக்கு அரசு வேலை கிடைத்ததால், இங்கு குடி பெயர்ந்தோம். எனது மாற்றாந்தாயிக்கு, 3 பெண்கள், ஒரு பையன் என 4 பிள்ளைகள் உள்ளனர்.