தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பீமா கோரேகான் வழக்கு - விடுதலை இயக்கம் மனித சங்கிலி போராட்டம் - viduthalai iyyakam

பீமா கோரேகான் வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யக் கோரி விடுதலை இயக்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

பீமா கோரேகான் வழக்கு சிறைப்படுத்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யக் கோரி போராட்டம்
பீமா கோரேகான் வழக்கு சிறைப்படுத்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யக் கோரி போராட்டம்

By

Published : Sep 16, 2021, 6:46 PM IST

சென்னை:1888ஆம் ஆண்டு பூனே நகருக்கு அருகே உள்ள பீமா கோரேகான் என்ற பகுதியில் மராத்தியர்கள் - கிழக்கு இந்திய கம்பெனிக்கிடையே போர் நடைபெற்றது. இதில், ஒடுக்கப்பட்ட மக்களைக் கொண்டு போரிட்ட கிழக்கு இந்திய கம்பெனி வெற்றி கண்டது.

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் பீமா கோரேகான் நினைவுச் சின்னத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெறும்.

அந்த வகையில் 2018ஆம் ஆண்டு மரியாதை செலுத்த சென்றவர்கள் மீது ஒரு கும்பல் கற்களை வீசி தாக்கியதில் அங்கு கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்திற்கு காரணமானவர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் எனக் கூறி இந்திய அரசு சிலரைக் கைது செய்தது.

பீமா கோரேகான் வழக்கு சிறைப்படுத்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யக் கோரி போராட்டம்

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விவரம்:

  • ஆனந்த் டெல்டும்டே
  • வரவர ராவ்
  • சுதா பரத்வாஜ்
  • ஸ்டேன் சாமி
  • கௌதம் நவ்லகா
  • சுதிர் தாவ்லே
  • அருண் ஃபெரைரா
  • வெரோன் கன்சால்வ்ஸ்
  • சுரேந்திர கேட்லிங்
  • ரோனா வில்சன்
  • ஷோமா சென்
  • மகேஷ் ராவத்
  • ஜோதி ரகோபா ஜக்தாப்
  • சாகர் டாட்யாராம் கோர்கே
  • ரமேஷ் முரளிதர் கெய்சோர்
  • ஹனி பாபு

இவர்களில் ஸ்டேன் சாமி உடல்நலக் குறைவால் கடந்த ஜூலை மாதம் உயிரிழந்தார். இந்நிலையில் வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யக்கோரி விடுதலை இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (செப்.15) மனித சங்கில் போராட்டம் நடைபெற்றது.

திட்டமிட்ட சதி

கைது செய்யப்பட்வர்களின் மடிக்கணியில் மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்புடைய கடிதங்கள் இருந்தன என்றும், அதுதான் வழக்குகளுக்கு அடிப்படை ஆதாரம் என்றும் கூறுகிறது தேசிய புலனாய்வு முகமை (NIA). ஆனால் இது திட்டமிட்ட சதி என்பது இப்பொழுது வெளிப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் அமெரிக்க பார் கவுன்சிலின் உதவியோடு 'ஆர்செனிக் கன்சல்டிங்' என்ற மென்பொருள் குற்ற புலனாய்வு நிறுவனம் மூலம் ஆய்வுகள் செய்து இந்தக் கடிதங்கள் அனைத்தும் மடிக்கணினிகள் ஹேக் செய்யப்பட்டு அவர்களுக்குத் தெரியாமலேயே வைக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளது.

திட்டமிட்ட சதி என்று நிரூபிக்கப்பட்டாலும் அவர்களுக்குப் பிணைக்கூட வழங்காமல் ஒன்றிய பாஜக அரசு கொடுமைப்படுத்தி வருகிறது என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

உபா சட்டத்தில் வழக்குப்பதிவு

சாதாரண இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படிகூட வழக்குப்பதிவு செய்ய எந்தக் குற்ற முகாந்திரமும் இல்லாத நிலையில், கொடூரமான உபா (UAPA) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது சந்தேகத்திற்கு இடமின்றி அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே என்றனர்.

சிறைப்படுத்தப்பட்ட அனைவரும் முக்கியமானவர்கள் என்றாலும் இந்திய மக்களோடு உணர்ச்சிப்பூர்வமாகப் பிணைக்கப்பட்டிருக்கிற டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பேத்தி ரமாவின் கணவர், பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பீமா கோரேகான் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்திட வேண்டும் என சர்வதேச ஜனநாயக தினமான நேற்று தமிழ்நாடு முழுவதும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க: காங்கிரசில் இணைகிறாரா கன்னையா குமார்?

ABOUT THE AUTHOR

...view details