தமிழ்நாட்டில் தற்போதுவரை உயர் ஜாதிப் பிரிவில் பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டு முறை அமல் படுத்தபடவில்லை. இந்நிலையில் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு கல்வியில் 10 விழுக்காடு தனி இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்த்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாரதியார் பல்கலைகழகத்தில் எம்.எஸ்சி முதுகலை மருத்துவ உயிர் தொழில்நுட்பவியல் படிப்பில் வட மாநில மாணவர் ஒருவருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்பட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. பொதுப்பிரிவில் 4 மாணவர்கள், ஓபிசி பிரிவினரில் 3 மாணவர்கள், எஸ்.சி பிரிவில் ஒரு மாணவர், உயர் சாதி பிரிவு ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டில் ஒரு மாணவர் என ஒன்பது பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.