மாநிலங்களவை நியமன எம்.பி.யாக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து சென்னையில் தற்போது நடைபெற்றுவரும் ”தி வாரியர்” திரைப்படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்த பாரதிராஜா, இளையராஜா மாநிலங்களவை நியமன எம்பியாக தேர்வானதற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
எம்.பி.யாக இளையராஜா நியமனம்: பாரதிராஜா வாழ்த்து - Ilayaraja
மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ள இளையராஜாவுக்கு பாரதிராஜா வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
எம்பியாக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜாவுக்கு பாரதிராஜா வாழ்த்து
இதுகுறித்து அவர், ”என் நண்பன் இளையராஜா, 50 வருடத்துக்கு மேலாக ஒன்றாகப் பயணித்து வருகிறோம். அவனது வளர்ச்சி நம்ப முடியாதது, தமிழ்நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து, சினிமா கலைஞர்கள் எவ்வளவு கௌரவிக்கப்படுகிறார்கள். இன்னும் எத்தனை ஜன்மம் எடுத்தாலும் சினிமாக்காரனாக தான் பிறக்க வேண்டும்” என கூறினார்.
இதையும் படிங்க:800 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள தி லெஜண்ட்!