தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முடிவிற்கு வந்த பரத் - வாணி போஜனின் த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பு...

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி (Axess Film Factory) நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் பரத் - வாணி போஜனின் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

new movie  bharath  vanibhojan  bharath vanibhojan new movie  thriller movie  movie update  பரத்  வாணி போஜன்  வாணி போஜ புதிய படம்  பரத் வாணி போஜனின் படப்பிடிப்பு நிறைவு  புதிய படம்  சினிமா செய்திகள்
வாணி போஜன்

By

Published : Sep 26, 2021, 10:16 PM IST

சென்னை:பரத் நடித்துள்ள பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி (Axess Film Factory) நிறுவனத்தின் தயாரிப்பாளார் G. டில்லிபாபு தயாரித்துள்ளார். பெயரிடப்படாத இப்படத்திற்கு, தற்காலிகமாக “Production No 12” என தலைப்பிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் பரத், வாணி போஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தினை அறிமுக இயக்குநர் சக்திவேல் இயக்கியுள்ளார். இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்றதை தொடர்ந்து, இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

முடிவடைந்த படப்பிடிப்பு

தயாரிப்பாளரை ஈர்க்கும் இயக்குநர்

இது குறித்து ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவன தயாரிப்பாளர் G. டில்லிபாபு கூறியதாவது, “எங்கள் நிறுவனத்தின் “Production No 12” படத்தின் முழுப்படப்பிடிப்பும் இனிதே முடிவடைந்துள்ளது. மிக திறமை மிகுந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருடன் இணைந்து பணியாற்றிய இந்த அனுபவம், மிக மகிழ்ச்சிகரமானதாக இருந்தது.

பரத் , வாணி போஜன், இயக்குநர் K.S.ரவிக்குமார் ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் மிக அற்புதமான நடிப்பினை தந்துள்ளார்கள். இயக்குநர் M.சக்திவேல் அவர்கள் இயக்கும் முதல் படம் போல இல்லை, மிக அனுபவமிக்க ஒரு இயக்குநரை போலவே அவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

அவர் தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குநராக இருப்பார். தமிழ் சினிமாவில் அனைத்து தயாரிப்பாளர்களாலும் விரும்பப்படும் இயக்குநராக விரைவில் மாறுவார்.

இயக்குநராக அவரது திறமையை தாண்டி, அவரது திட்டமிடலிலும் அதை செயல்படுத்தும் விதத்திலும் மிகச்சரியாக செயல்பட்டு, இப்படத்தை திட்டமிட்ட பட்ஜெட்டில், உரிய கால அவகாசத்தில் முடித்தது மிக பிரமிப்பானது.

விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும். அதைத்தொடர்ந்து டிரெய்லர், திரை வெளியீடு குறித்த அறிவிப்புகளும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்” என்றார்.

இதையும் படிங்க: வாலை சுருட்டு... இன்று மாலை ருத்ர தாண்டவம் லிரிக் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details