சென்னை: பூந்தமல்லியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுப்பானக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வருபவர் மகாலிங்கம். இவர் நேற்று (ஜூலை 3) கடைக்கு வந்த மது பாட்டில்களை அடுக்கிக் கொண்டிருந்தார். அப்போது பெட்டியில் அடுக்கி வைக்கபட்டிருந்த பீர் பாட்டில் திடீரென வெடித்து சிதறியது.
இதில் மகாலிங்கத்திற்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு ஓடிவந்த ஊழியர்கள் மகாலிங்கத்தை மீட்டு அருகே உள்ள தனியார் கண் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.