சென்னை:தமிழ்நாட்டில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரியில் 900 இடங்களும், அரசு உதவிபெறும் 14 கல்லூரிகளில் 1,140 இடங்களும் என 2,040 இடங்களில் பி.எட் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு செப்டம்பர் 1 முதல் 11 வரை ஆன்லைன் மூலம் https://www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்குநர் கீதா செய்தி வெளியீட்டில் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்) முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை https://www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.
விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும் எனவும், எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்கள் கட்டணமாக 250 செலுத்தினால் போதுமானது. மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தேர்வு செய்தல் வேண்டும். மேலும், கூடுதல் விபரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை விவரங்கள் https://www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.