தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை குழு பி.ஆர்க் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு இன்றுமுதல் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.tneaonline.org அல்லது www.tndte.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள கட்டடக்கலை மற்றும் திட்டமிடல் துறை, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் தனியார், சுயநிதி பொறியியல் கல்லூரியில் உள்ள பி.ஆர்க் படிப்பில் சேருவதற்கு கலந்தாய்வு நடத்தப்படும்.
இதில் பங்கேற்க கட்டடக்கலை கவுன்சில் மூலம் நடத்தப்படும் தேசிய அளவிலான தகுதித் தேர்வை எழுதி தகுதி பெற்றிருக்க வேண்டும்.
இதையும் படிங்க: அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரம்; உத்தரவை மீறினால் அண்ணா பல்கலை. அங்கீகாரம் ரத்து - ஏஇசிடிஇ