தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

#WhoKilledShubashree: அதிமுக பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண்: அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துகள்! - தலைவர்கள் கருத்து

சென்னை: அதிமுகவினர் வைத்த பேனரால் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த விவகாரத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

leaders

By

Published : Sep 13, 2019, 7:26 PM IST

ஓபிஎஸ் & ஈபிஎஸ்: எந்தச் சூழ்நிலையிலும், எந்தக் காரணத்திற்காகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட் அவுட்கள், பேனர்கள் வைப்பதை கட்சி நிர்வாகிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

மு.க. ஸ்டாலின்: நிகழ்ச்சிகளுக்காக பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பேனர்கள், கட்-அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அறிவுரையை யாரேனும் மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு அந்த நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்கவும்மாட்டேன்.

டிடிவி தினகரன்: விளம்பரப் பதாகையால் பலியான இளம் பெண் சுபஸ்ரீக்கு இரங்கல். காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். பதாகைகள் வைக்க வேண்டாம் என கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

சீமான்: விதிகளை மீறி சாலையின் நடுவே பதாகை வைத்து தங்கை சுபஸ்ரீயின் உயிரைப் பறித்தவர்களையும், அதற்குத் துணைபோன அதிகாரிகளையும் உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும். உயிரிழந்த தங்கை சுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு இடையூறாக எக்காலத்திலும் இனி பதாகைகள் சாலைகளில் வைக்கமாட்டோம் என்று உறுதியேற்கிறோம்.

ராமதாஸ்: பாட்டாளி மக்கள் கட்சியின் நிகழ்ச்சிகளுக்கு பதாகைகள், கட்-அவுட்களை வைக்கக் கூடாது என்ற எனது ஆணை இன்றும், என்றும் பாமக நிர்வாகிகளால் கடைபிடிக்கப்பட வேண்டும். இந்த விதியை மீறுவது குறித்து பாமகவினர் நினைத்துக்கூட பார்க்கக் கூடாது!

கே.எஸ். அழகிரி: சுபஸ்ரீயின் உயிரிழப்புக்கு யார் பொறுப்பு? ஆளும் அதிமுகவினரின் சட்டவிரோத நடவடிக்கை காரணமாக டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டதால் இத்தகைய விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ABOUT THE AUTHOR

...view details