தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 8, 2020, 2:36 PM IST

ETV Bharat / state

மத்திய அரசை கண்டித்து வங்கி ஊழியர்கள் போராட்டம்!

சென்னை: அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.

வங்கி ஊழியர்கள் போராட்டம்
வங்கி ஊழியர்கள் போராட்டம்

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை கண்டித்து நாடு முழுவதும் பாரத் பந்த் எனப்படும் பொது வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னையில் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, அகில இந்திய காப்பீடு ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வங்கி மற்றும் நிதி சேவை அமைப்புகள் ஒன்றிணைந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.

வங்கி ஊழியர்கள் போராட்டம்

இது குறித்து, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.ஹெச்.வெங்கடாச்சலம் கூறுகையில், "மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்து இன்று நாடு முழுவதும் 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதலாளிகளுக்கு அரசு நிறைய வரிச்சலுகைகளை கொடுக்கிறது. மற்றொருபுறம் சாதாரண மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு அரசு எந்த உதவியும் செய்வதில்லை. தொழிலாளர் நல சட்டங்களை எல்லாம் முதலாளிகளுக்கு சாதகமாக மாற்றி வருகின்றனர். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதற்கும் ஏழைகள் மேலும் ஏழைகளாவதற்கும் செயல்படுவதுதான் அரசின் கொள்கை, இதை நாங்கள் எதிர்க்கிறோம்.

அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டம்

வங்கிகள் இணைப்பு என்று கூறி கிளைகளை மூடிக்கொண்டு இருக்கிறார்கள், சேவையைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். வாராக் கடன்களை எல்லாம் தீர்வு என்று கூறி தள்ளுபடி செய்து, முதலாளிகளுக்கு சலுகை கொடுக்கிறார்கள். ஆனால் அந்த சுமையை ஏழை மக்களின் மீது வைக்கிறார்கள். அபராத கட்டணத்தை அதிகரிக்கிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறோம்.

செய்தியாளர்களை சந்தித்த சி.ஹெச்.வெங்கடாச்சலம்

இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் 5 லட்சம் வங்கி ஊழியர்களும் அலுவலர்களும் தமிழ்நாட்டில் 25 ஆயிரம் வங்கி ஊழியர்களும் அலுவலர்களும் கலந்துகொண்டுள்ளனர். இதனால், இயல்பான வங்கி சேவை, ஏடிஎம் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 21 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலை பரிவர்த்தனை தேங்கியுள்ளன " என்றார்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் அகில இந்திய வேலைநிறுத்தம்: துறைமுகத்தில் வேலை பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details