வங்கதேசத்தை சேர்ந்தவர் புராஜஷ் சந்திர நாத். இவரது சகோதரர் பங்கஜ் சந்திர நாத் (வயது 28) வங்கதேசத்தில் நடந்து விபத்து ஒன்றில் அவரது வலது கை மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், மனநலம் பாதிக்கப்பட்டிருந்த பங்கஜ் சந்திரநாத்துக்கு சிகிச்சை அளிக்க, வேலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அங்குள்ள மருத்துவமனை பரிந்துரைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, சிகிச்சைக்காக புரோதன்ய சந்திர நாத், பங்கஜ் சந்திர நாத் மற்றும் தன் உறவினர்களுடன் வேலூருக்கு வந்துள்ளார். இதையடுத்து, வேலூரில் தனியார் விடுதியில் தங்கியிருந்த பங்கஜ் சந்திர நாத் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி காணாமல் போனார்.