தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விளம்பரம் செய்யும் யூடியூபர்கள் மீது நடவடிக்கை பாயுமா? - ஆன்லைன் ரம்மி சட்டம் சொல்வது என்ன? - நடிகர் சரத்குமார்

தமிழக சட்டசபையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தடையை மீறி ஆன்லைன் ரம்மி விளையாட ஊக்கப்படுத்தி விளம்பரம் செய்யும் நடிகர்கள், சமூக வலைத்தள இன்ஃப்புளுயன்சர்கள் மீது நடவடிக்கை பாயுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆன்லைன் ரம்மிக்கு தடை
ஆன்லைன் ரம்மிக்கு தடை

By

Published : Oct 19, 2022, 6:13 PM IST

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்யும் மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டத்தை மீறி ஆன்லைன் சூதாட்டம் நடத்தினால், மூன்று மாதம் ஜெயில் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று அச்சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதித்து நிறைவேற்றப்பட்ட மசோதாவில், சட்டத்தை மீறி ஆன்லைன் சூதாட்டம் நடத்துகிறவர்களுக்கு மூன்று மாதம் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். ஊடகங்களில் விளம்பரம் செய்தால் ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதித்து தண்டிக்கப்படுவர்.

இரண்டாவது முறையாக அக்குற்றத்தைச் செய்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும், என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குப் பிரபல நடிகர்கள் முதல் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக திகழும் இன்ஃப்புளுயன்சர்கள் வரை பலரும் விளம்பரங்கள் செய்து வருகின்றனர். ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்துவரும் நடிகர் சரத்குமார் சமீபத்தில் ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிப்பது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு,"குடி, சிகரெட் பழக்கம் உடல்நலத்தைக் கெடுக்கும் இதெல்லாம் உங்களால் தடை செய்ய முடியுமா.

அதே மாதிரி எதை தடை செய்யணும்னு நான் முடிவு பண்ண முடியாது. அதை உச்சநீதிமன்றமும், அரசும் மட்டும் தான் பண்ண முடியும். அப்படி அரசாங்கம் தடை செய்த ஒன்றில் நான் நடிக்க மாட்டேன். ஆனால் அரசாங்கம் தடை செய்யாத ஒன்றில் நடித்தால் யாரும் என்னைக் கேள்வி கேட்க முடியாது. முதலில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யுங்கள். எனப் பதிலளித்திருந்தார்.

தற்போது ஆன்லைன் ரம்மிக்கு தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில் இனி ரம்மி விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்கள், யூடியூப், இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தும் இன்ஃப்புளுயன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:தடையை மீறி ஆன்லைன் சூதாட்டம் நடத்தினால் சிறை : மசோதா நிறைவேறியது !

ABOUT THE AUTHOR

...view details