தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டிற்கு வர அனுமதி இல்லை - காவல்துறை அதிரடி! - Ban on entry to Tamil Nadu from Pondicherry

தமிழ்நாட்டில் இன்று முழு ஊரடங்கு காரணமாக வெளி மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.

ban-on-entry-to-tamil-nadu-from-pondicherry-because-of-full-curfew
ban-on-entry-to-tamil-nadu-from-pondicherry-because-of-full-curfew

By

Published : Jan 16, 2022, 1:07 PM IST

தமிழ்நாடு முழுவதும் தற்போது அதிவேகமாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

இதையடுத்து தமிழ்நாடு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிறன்று முழுநேர ஊரடங்கும் அமலில் உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று (ஜன.16) ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் புதுச்சேரியில் இருந்து வருவோர் திருப்பி அனுப்பப்படுகின்றனர். உரிய காரணம் இன்றி தமிழ்நாடு வருவோரை எல்லையில் காவல் துறையினர் நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர். இதனால் தமிழ்நாடு-புதுச்சேரி எல்லையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

புதுச்சேரியில் ஜனவரியில் இருந்து தற்போதுவரை தொற்று விகிதம் அதிகரித்துள்ளதால், அங்கிருந்து தமிழ்நாட்டுக்குள் வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : Sunday Lockdown: மயிலாடுதுறையில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு!

ABOUT THE AUTHOR

...view details