இது குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலர் புருஷோத்தமன் கூறியதாவது, "பி.ஆர்க் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூலை மாதம் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்தப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பித்த 2,170 மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் 1,827 மாணவர்கள் நேரடி கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பி. ஆர்க் பட்டப்படிப்பு கலந்தாய்வு ஆகஸ்ட் 6இல் தொடக்கம் - b. arch
சென்னை: பி.ஆர்க் பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நேரடி கலந்தாய்வு வரும் ஆறாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
புருஷோத்தமன் செய்தியாளர்கள் சந்திப்பு
பி.ஆர்க் பொறியியல் பட்டப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு சென்னை தரமணியில் நடைபெறும். ஆகஸ்ட் 6ஆம் தேதி காலையில் சிறப்புப் பிரிவினருக்கும் அதனைத் தொடர்ந்து மதியம் 2 மணி முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது" என்று கூறினார்.
அதேபோல் எம்பிஏ, எம்சிஏ படிப்பில் சேர டான்செட் தேர்வு எழுதிய மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.