சென்னை:அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில் இன்று (செப். 30) ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆயுத பூஜை விழா வரும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து விஜயதசமி பண்டிகை வருவதால் அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் கடைசி வேலை நாளான இன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வித்துறை அலுவலகங்கள், பல்கலைக்கழகங்களில் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜை கொண்டாட்டம் - விஜயதசமி
அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது
அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜை விழா கோலாகல கொண்டாட்டம்
அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில் துணைவேந்தர் வேல்ராஜ், பதிவாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பல்கலைக்கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஆயுத பூஜை - அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை