தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திடீரென தீப்பிடித்து எரிந்த ஆட்டோ..! - fire accident

சென்னை அண்ணா நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீரென தீ பிடித்து எரிந்தது.

ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிந்து நாசம்.
ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிந்து நாசம்.

By

Published : Sep 17, 2021, 9:51 PM IST

சென்னை: அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ராஜேந்திரன் (57). இவர் இன்று (செப்.17) மதியம் சவாரிக்காக சென்றார்.

அண்ணாநகர் விரிவாக்கம் மெயின் ரோடு வழியாக சென்று கொண்டிருந்த போது திடீரென ஆட்டோவில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் ராஜேந்திரன் ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடினார்.

பின்னர் ஆட்டோவில் மளமளவென தீ பரவியது. அங்கிருந்த பொதுமக்கள் உதவியோடு ராஜேந்திரன் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார்.

திடீரென தீப்பிடித்து எரிந்த ஆட்டோ

ஆனால் ஆட்டோ முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. விபத்து குறித்து தகவல் அறிந்து அண்ணாநகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: உரத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

ABOUT THE AUTHOR

...view details