தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கவன ஈர்ப்பு போராட்டம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு - சென்னை செய்திகள்

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற திட்டமிட்டபடி கவன ஈர்ப்பு போராட்டம் நடக்கும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

Etv Bharatஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கவன ஈர்ப்பு போராட்டம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
Etv Bharatஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கவன ஈர்ப்பு போராட்டம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

By

Published : Jan 3, 2023, 8:52 AM IST

சென்னை:ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் வரும் 5ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திட்டமிட்டபடி அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்த பின்னர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கை உட்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நம்பிக்கையாக இருந்தனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட கூட்டங்களிலும் முதலமைச்சர் கலந்து கொண்டு அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில் ஆட்சி அமைந்து 18 மாதங்கள் கழிந்த பின்னரும் தங்களுக்குரிய கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லை என்பதால் ஜனவரி 5ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் எனவும், அதனைத் தொடர்ந்து மதுரையில் 8ஆம் தேதி கூடி அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசித்து அறிவிக்கப்படும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்தனர்.

அகவிலைப்படி உயர்வு:இந்த நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என்று 16 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு பண்டிகை என்று நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புத்தாண்டு பரிசாக அறிவித்திருந்தார்.

ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

அதனைத் தொடர்ந்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உள்ளிட்ட 16 சங்கங்களின் நிர்வாகிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் நேற்று (ஜன.2)அழைத்து சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததுடன் நிதிநிலை சரியான உடன் தங்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

ஜாக்டோ ஜியோ அறிவிப்பு:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பின்னர் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்ட முடிவுகளை கூட்டத் தலைவர்களான இரா. தாஸ், ஆ. செல்வம், காந்திராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘1.1.2023 அன்று முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பினை ஏற்று, ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். இச்சந்திப்பின்போது, 1.1.2023 முதல் 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டதற்கு நன்றியினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொண்டனர்.

அகவிலைப்படியினை ஒன்றிய அரசு வழங்கிய தேதியில் வழங்காமல் தொடர்ச்சியாக ஆறு மாத காலம் தாழ்த்துவதோடு நிலுவைத் தொகையினை மறுப்பது, காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு, மீண்டும் பழைய ஒய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைவது, தொகுப்பூதியம்-சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தினக்கூலியில் பணியாற்றும் ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி, எம்ஆர்பி செவிலியர், வருவாய் கிராம உதவியாளர், ஊர்ப்புற நுாலகர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்குவது, சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தினை முறைப்படுத்துதல், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், 21 மாத ஊதியமாற்று நிலுவைத் தொகையினை வழங்குதல் உள்ளிட்ட தமிழக முதலமைச்சர் பங்கேற்ற வாழ்வாதார மாநாட்டில் முதல்வரிடம் ஜாக்டோ ஜியோ சார்பில் வழங்கப்பட்ட ஆசிரியர்.,அரசு ஊழியர், அரசு பணியாளர் மற்றும் துறை பிரிவு வாரி ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து மாண்புமிகு முதலமைச்சரிடம் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமானது இரா. தாஸ், ஆ. செல்வம், காந்திராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

5.1.2023 அன்று முதலமைச்சரின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களிலும் நடைபெறும் அடுத்த கட்ட இயக்க நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்காக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டவாறு, எதிர்வரும் 8 ந் தேதி அன்று மதுரையில் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் கூட்டம் நடைபெறும். ஒருங்கிணைப்பாளர் கூட்டம் மதியம் 2 மணிக்கும்,அதனைத் தொடர்ந்து 3 மணிக்கு உயர்மட்டக்குழுக் கூட்டமும் நடைபெறும் அதில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:"அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும்" - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details