தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த வடமாநில இளைஞர்கள், பொதுமக்களை கண்டதும் தலைதெறிக்க ஓட்டம்!

மையிலாப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வடமாநில கொள்ளை கும்பலை பொதுமக்கள் விரட்டியடித்தனர்.

ஏடிஎம்யை  உடைத்து கொள்ளை முயற்சி
ஏடிஎம்யை உடைத்து கொள்ளை முயற்சி

By

Published : Feb 2, 2021, 3:40 PM IST

சென்னை:சென்னை, மயிலாப்பூர் சிபி ராமசாமி சாலையில் பேங்க் ஆப் பரோடா வங்கியின் ஏடி.எம் மையம் ஒன்று அமைந்துள்ளது. இன்று(பிப்.02) நள்ளிரவு 12.15 மணியவில் அந்த ஏடிஎம் மையத்திற்குள் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் புகுந்து அங்கிருந்த பணம் வழங்கும் இயந்திரத்தை உடைத்து உள்ளிருந்த பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர்.

அப்போது அந்த வழியாக சென்ற ஒருவர் ஏடிஎம். இயந்திரத்திலிருந்து சத்தம் வருவது கேட்டு சென்று பார்த்த போது, அங்கிருந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், ஆள்களை பார்த்ததும் செருப்பை விட்டு விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் மயிலாப்பூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு வடமாநில வாலிபர்கள் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்து கணினி கண்ணாடியை உடைத்து பணத்தை திருட முயன்றது தெரிய வந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து, பணம் திருட முயன்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:சூதாடிய 11 பேர் கைது: முக்கிய குற்றவாளிக்கு போலீஸ் வலை!

ABOUT THE AUTHOR

...view details