சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியில் உள்ள பாங்க் ஆஃப் பரோடா ஏ.டி.எம் மையத்தில் வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுப்பதற்காக நேற்று காலை சென்றார். அங்கு ஏ.டி.எம் மையத்தின் பணம் வரும் இயந்திர பாகம் திறந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
சர்வ சாதாரணமாய் போன ஏ.டி.எம் கொள்ளைச் சம்பவங்கள் ! - thiruvetriyur
சென்னை : திருவொற்றியூரில் பாங்க் ஆஃப் பரோடா ஏ.டி.எம் மையத்தில் உள்ள இயந்திரத்தின் பணம் வரும் பாகம் திறந்துள்ளதால், கொள்ளை முயற்சிக்கு வாய்ப்பிருக்கிறதா என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏ.டி.எம் கொள்ளைச் சம்பவம்
இதையடுத்து வங்கி அதிகாரிகள் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி ஏ.டி.எம் மையத்தில் உள்ள கேமிரா பதிவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
இதனையடுத்து மேற்கு மாட வீதியில் உள்ள 4 சி.சி.டி.வி கேமராக்கள் கடந்த 6 மாதங்களாக பழுதடைந்து இருப்பது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்ததோடு இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.