காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெரும் அத்திவரதர் நிகழ்ச்சியில், முறையான பாதுகாப்பு இல்லாமல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டதால் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசு தெரிவித்து வரும் நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 27பேர் வரை இறந்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.
'அத்திவரதர் நிகழ்ச்சிக்கு மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பு வேண்டும்' - central military force
சென்னை: அத்திவரதர் தரிசனத்திற்கு மத்திய பாதுகாப்புப் படை பிரிவின் பாதுகாப்பை வழங்கக் கோரி வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
chennai high court
இதனால் அத்திர வரதர் நிகழ்ச்சி வரும் பக்தர்களுக்கு மத்திய பாதுகாப்பு படை பிரிவின் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரித்த நீதிபதிகள் நாளை விசாரிப்பதாக கூறி ஒத்தி வைத்தனர்.