தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவிக்கான தேர்வு முடிவு வெளியீடு - certificate verification

சென்னை: கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவிக்கு தேர்வானவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி, வரும் 25ம் தேதி முதல் மே.6ம் தேதி வரையில் நடக்கிறது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

By

Published : Apr 22, 2019, 11:54 PM IST

இது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கையில்,

"கடந்த 2014-2015 மற்றும் 2017-2018 ம் ஆண்டுகளுக்கான, தமிழ்நாடு கூட்டுறவு சார்புப் பணிகளில் அடங்கிய கூட்டுறவுத் துறைக்கான கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் http://www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.

தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக ஏப்.25 ஆம் தேதி முதல் மே.6 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு முன்னர் தங்களது மூலச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணைய தளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை மேற்குறிப்பிட்ட நாளுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள விருப்பமில்லை எனக் கருதப்படும். மேலும், விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்கப்படும்", என்று கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details