இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் குரூப்-2 வகுப்பைச் சார்ந்த இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். அதன்படி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இணை இயக்குநர் ஶ்ரீதேவி, ஆசிரியர் தேர்வு வாரியம் கூடுதல் உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர் நரேஷ், இணை இயக்குநராக (தொழிற்கல்வி) பள்ளிக்கல்வி இயக்ககத்தில் நியமனம் செய்யப்படுகிறார்.
பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்கள் பணியிடமாற்றம்! - பள்ளிக் கல்வித்துறையில் பணியிட மாற்றம்
சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் இணை இயக்குநர்களை தமிழ்நாடு அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில்
பள்ளிக் கல்வி இயக்கத்தின் தொழிற்கல்வி இணை இயக்குநர் சுகன்யா, இடைநிலைக் கல்வி இணை இயக்குநராக நியமனம் செய்யப்படுகிறார். பள்ளிக் கல்வி இயக்ககத்தின் இடைநிலைக் கல்வி இணை இயக்குநராக பணியாற்றிய கோபிதாஸ், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இணை இயக்குநராக நியமனம் செய்யப்படுகிறார்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் லஞ்சம்: ஊழியர் பணியிட மாற்றம்!