தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயங்கி விழுந்த பேருந்து ஓட்டுநரை விரைந்து காப்பாற்றிய காவலர்களுக்கு பாராட்டு - Driver

மாநகரப் பேருந்து ஓட்டிக் கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்த ஓட்டுநரை திறமையாக காவல்துறை வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றிய காவல் உதவி ஆய்வாளருக்கும், காவல் ஓட்டுநருக்கும் பாராட்டுகள் குவிகின்றன.

Breaking News

By

Published : Sep 10, 2021, 9:45 PM IST

Updated : Sep 10, 2021, 10:02 PM IST

சென்னை: நியூ ஆவடி சாலையில் நேற்று மாலை 101 தடம் எண் கொண்ட சென்னை மாநகரப் பேருந்து , பூந்தமல்லியில் இருந்து பாரிமுனை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது மாநகரப் பேருந்து ஓட்டுநர் திடீரென மயக்கம் அடைந்ததால், நிலைதடுமாறி வாகனத்தை நியூ ஆவடி சாலை பச்சையப்பன் சிக்னல் சந்திப்பில் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு மயங்கி விழுந்துள்ளார்.

பேருந்தில் பயணித்த பயணிகள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை. அப்போது அந்த பகுதியில் ரோந்து வாகனத்தின் மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கீழ்பாக்கம் உதவி ஆய்வாளர் யாகியா, பேருந்து நிலை தடுமாறி நின்றதைக் கண்டுள்ளார். உடனடியாக பேருந்தில் மயங்கிக் கிடந்த ஓட்டுநரை தனது ரோந்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். மாலை நேரத்தில் போக்குவரத்து அதிகமாக இருந்ததால், சமயோசிதமாக சைரன் ஒலியை எழுப்பிக்கொண்டே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு ரோந்து வாகன ஓட்டுநர் கார்த்திகேயனிடம் தெரிவித்துள்ளார்.

முதலில் மயங்கி விழுந்த பேருந்து ஒட்டுநரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் வாகனத்தை வேகமாக ஓட்டிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.அப்போது மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சையளித்து பேருந்து ஓட்டுநரை காப்பாற்றியுள்ளனர். அதன்பின் விசாரணை செய்ததில், அவர் பூந்தமல்லி பணிமனையைச் சேர்ந்த பேருந்து ஓட்டுனர் தங்கராஜ் என்பதும், அவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

பேருந்து ஓட்டுநர்

மயங்கி விழுந்த பேருந்து ஓட்டுநர் தங்கராஜை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்ததால், உயிரை காப்பாற்ற முடிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மயங்கி விழுந்த பேருந்து ஓட்டுநரை சமயோஜிதமாக யோசித்து உயிரை காப்பாற்றிய உதவி ஆய்வாளர் யாகியா மற்றும் காவலர் கார்த்திகேயனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதையும் படிங்க:தடுப்பூசி தகவல்கள் விரல் நுனியில் - கோவின் தளத்தில் புதிய வசதி

Last Updated : Sep 10, 2021, 10:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details